அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கனும்! ரூ.75க்கு கேசினோ விளையாடி ரூ.5 கோடியை அள்ளி சென்ற அமெரிக்கர்
அமெரிக்காவில் 75 ரூபாய்க்கு கேசினோ விளையாடியவருக்கு இந்திய மதிப்பில் 5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா என்ற மாகாணத்தில் ஒரு கேசினோ கிளப் உள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி அந்த கிளப்பிற்கு வருகை தந்து பல வகையான விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம்.
இது சூதாட்டம் கிளப் என்பதால் பணத்தை பனையமாக வைத்து விளையாடுவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம். இல்லையென்றால் பெரும் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அமெரிக்கர், ஒரு டாலர் (இந்திய மதிப்பில்) 75 ரூபாய்க்கு விளையாட தொடங்கியுள்ளார். இதில் அவருக்கு எதிர்பாராதவிதமாக 6 லட்சத்து 96 ஆயிரத்து 730 அமெரிக்க டாலர் விழுந்துள்ளது.
இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை கேசினோ வரலாற்றிலே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.