வாழ்க்கையை மாற்ற கடைபிடிக்க வேண்டிய 5 தினசரி பழக்கங்கள்
சின்னஞ்சிறிய பழக்கங்களை கூட தினசரி கடைப்பிடிக்கும் போது, அது நாளடைவில் நம் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அப்படியாக நம் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் 5 தினசரி பழக்கவழக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைகளை பட்டியலிடுதல்
அன்றைய நாளில் செய்ய வேண்டிய 3 முக்கிய வேலைகளை பட்டியலிடுங்கள். அந்த 3 இலக்குகளை அடைவதன் மூலம், மன அழுத்தம் நீங்கி சாதனை உணர்வு மேலோங்கும்.
உடற்பயிற்சி
தினமும் காலையில் சிறுது நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுது தூர ஓட்டம் அல்லது நடை அல்லது வீட்டிலே செய்யும் எளிய பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மன மற்றும் உணர்ச்சி ஆரோக்யத்தையும் அதிகரிக்கும்.
தொலைக்காட்சியை அணைப்பது
தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்க்கும் நேரத்தை குறைப்பதன் மூலம், ஆக்கபூர்வமான செயல்களை செய்ய மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட போதிய நேரம் கிடைக்கும்.
நன்றியுணர்வு
நேர்மறையான விடயங்களில் கவனம் செலுத்த, பிரார்த்தனை, நாட்குறிப்பு எழுதுவது, உரையாடல் மூலம் நன்றியுணர்வை பழக்கமாக்குங்கள்.
எழுதுதல்
தினசரி எழுதுவதை பழக்கமாக்குங்கள். அது சிறிய பதிவாகவோ அல்லது நாட்குறிப்பாகவோ இருக்கலாம். இது உங்கள் சிந்திக்கும் திறனை கூர்மைப்படுவதோடு, உங்களின் சுய விழிப்புணர்வை ஆழப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |