பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறையை பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் திகதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 16ஆம் திகதி திருவள்ளுவர் தினம் மற்றும் அதேபோல், 17ஆம் திகதி உழவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என நான்கு நாள் விடுமுறை இருக்கிறது.

இந்நிலையில், ஒவ்வொரு பொங்கல் கொண்டாட்டத்தின்போதும், தமிழக அரசு பொங்கலுக்கு முந்தைய தினமான போகி தினத்தன்று அவரவர், தங்களது சொந்த ஊர் செல்ல ஏதுவாக விடுமுறையை அறிவிக்கும்.
அந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் ஒருநாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டும் வரும் 14ஆம் திகதி போகி அன்று விடுமுறை விடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.
அந்தவகையில், தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், பொங்கல் பண்டிகைக்கு வரும் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறையை பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |