சரும வறட்சியை போக்க உதவும் இயற்கை பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
5 face packs for winter dry skin- பொதுவாக பெண்கள் அனைவரும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சரும வறட்சி, அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
குளிர்ந்த காற்று மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைவதால் சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, சருமம் வறண்டு காணப்படும்.
அந்தவகையில், குளிர்காலத்தில் வறண்ட சருமத்திற்கு உதவும் இயற்கை பேஸ்பேக் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
- தேன்- ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்து அதனுடன் சிறிதளவு பால் மற்றும் தேன் சேர்த்துக் கலக்கவும்.

இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- காபி- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் காபித் தூளுடன் தயிர் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
பின் இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் முகத்தை மென்மையாகக் கழுவவும்.
இந்த கலவையை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து பயனப்டுத்தி வந்தால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |