காலை உணவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்.., புற்றுநோய் வருமாம்
புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், புற்றுநோய் வராமல் தடுக்க காலை வேளையில் இந்த 5 உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று.
பதப்படுத்தப்பட்ட உணவு
உணவுகளை பதப்படுத்தும்போது அவை கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவைக்காகவும் சில ரசாயனங்கள் கலந்த பொருட்களை சேர்க்கின்றனர்.
இவ்வாறு சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த வகையில், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வெறும் வயிற்றி காலை வேலையில் எடுத்துக்கொள்ளும்போது வாய் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக ஆபத்தானது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை காலை உணவாக அடிக்கடி ஏற்படுத்துகிறவர்களுக்கு குடல் மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாகின்றன.
பதப்படுத்தப்பட்ட தானியங்கள்
காலையில் கார்ன் பிளேக்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட வகைகளை நாம் விரும்பி எடுத்துக் கொள்கிறோம். குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளை அதிகமாகக் கொடுக்கிறோம்.
பதப்படுத்தப்பட்ட தானியங்கள் தொடர்ச்சியாக காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும்போது அது உடலில் நீர்ச்சத்து குறைபாடு தொடங்கி வாய் புற்றுநோய் வரைக்கும் ஏற்படுத்தும்.
பேக்கிங் பொருட்கள்
காலை உணவில் பிரட், பர்கர், சாண்ட்விச் உள்ளிட்டவை மிக ஆபத்தானவை. குறிப்பாக காலை வேளையில் எடுத்துக் கொள்ளவே கூடாது.
பேக்கிங் பொருள்களில் மைதா, சர்க்கரை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கும் இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
மேலும், பேக் செய்ய சுவையை கூட்டவும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படும். இவை வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண்ணை உண்டாக்கும்.
பிளேவர்டு யோகர்ட்
காலை உணவில் கடைகளில் ரெடிமேடாக பிளேவர்கள் சேர்க்கப்பட்ட யோகர்ட் மற்றும் பதப்படுத்திய பிளேவர்டு செய்யப்பட்ட யோகர்ட்டை சாப்பிடுவதன் மூலம் குடல் ஆரோக்கியமும் ஏற்படும்.
மேலும், வாய்ப்புண் மற்றும வாய்ப் புற்றுநோய் ஆபத்தும் அதிகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |