பானை போல் இருக்கும் தொப்பை பத்தே நாளில் குறைய வேண்டுமா? அப்போ இந்த 5 உணவுகள் போதுமே
கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.
இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 5 ஆரோக்கியமான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
1. சீரகம்
சீரகம், செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க உதவுகிறது. சாப்பிடுவதால் மெட்டபாலிச சத்து அடிகரிக்கவும், கனமான உணவுகள் கூட எளிதில் ஜீரணம் ஆகவும் உதவுகிறது.
இதை தினசரி உணவில் சேர்த்து வந்தால் கொழுப்பை எரித்து வயிற்று தொப்பையை கரைக்க உதவுகிறது.
2. மஞ்சள்
மஞ்சளில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் பண்புகள் வயிற்று புண்களை ஆற்றும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.
மேலும், வயிறு வீக்கத்தை கட்டுப்படுத்துதல், ரத்த சர்க்கரயளவை கட்டுப்படுத்துதல் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
3. கருமிளகு
கருமிளகில் பைப்ரின் என்ற மருத்துவ குணம் நிறைந்த மூலிகை உள்ளது. இது, உடல் எடையை அதிகரிக்கும் செல்களை வளர விடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. க
ருப்பு மிளகு, உணவில் நல்ல காரத்தை சேர்ப்பது மட்டுமன்றி உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.
4. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை உடலில் கூடுதல் கொழுப்பு சேராமலும் பார்த்துக்கொள்கிறது. குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்புகளை விரைந்து அகற்றுகிறது.
இதன் இனிப்புச் சுவையானது சர்க்கரைக்காக இருக்கும் க்ரேவிங்க்ஸை தணித்து ஒட்டுமொத்த எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
5. இஞ்சி
இஞ்சியில் உள்ள தெர்மோஜினிக் சத்து, உடல் வெப்பநிலையை உயர்த்துவதற்கும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இதன் விளைவாக, இது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைப்பதற்கும் கலோரிகளை எரிப்பதற்கும் உதவுகிறது. மேலும் இஞ்சி செரிமானம் எளிதாகி குடல் வீக்கத்தை குறைத்து வயிற்றை தட்டையாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |