50 வயதிற்கு மேல் அவசியம் சாப்பிடவேண்டிய 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக வயது அதிகரிக்கும் போது பெண்கள் தங்கள் உடல் மற்றும் மனதளவில் பலவிதமான பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்வார்கள்.
இதை சமாளிக்க உணவுகள் பெரிதளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அந்தவகையில், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
கருஞ்சீரகம்
கருஞ்சீரக விதைகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகின்றன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.

பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆளி விதை
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆளி விதை மிகவும் பயனுள்ளது. இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுவதுடன், ஒமேகா-3 சத்துகள் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

டார்க் சாக்லேட்
70% டார்க் சாக்லேட்டை தினமும் ஒரு சிறிய துண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும். இது உடல் சோர்வை நீக்கி, மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

சியா விதைகள்
சியா விதைகள் செரிமானத்திற்கு நல்லது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்று உப்புசத்தை குறைத்து, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரில் ஊறவைத்து குடிக்கலாம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |