எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 உணவுகள்: என்னென்ன தெரியுமா?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவியாக அமையும்.
அந்தவகையில், எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1. உப்பு
உப்பில் உள்ள அதிகப்படியான சோடியம், உடலில் உள்ள கால்சியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
இதனால் உடல் இழந்த கால்சியத்தை ஈடுசெய்ய எலும்புகளிலிருந்து பெறுவதால் நாளடைவில் இது எலும்புகள் மெலிந்துபோக வழிவகுக்கிறது.
2. சர்க்கரை
அதிக சர்க்கரை உட்கொள்வது கால்சியம் உறிஞ்சுதலை தடுக்கிறது.
மேலும், சர்க்கரை சாப்பிடுவதால் எலும்பு திசுக்களை மீண்டும் உருவாக்குவதை உடலுக்கு கடினமாக்குகிறது.
3. குளிர்பானங்கள்
குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சமநிலையை சீர்குலைக்கிறது.
இவற்றுடன் அதிகப்படியான சர்க்கரை சேரும்போது, எலும்புகளுக்கு இருமடங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
4. காஃபின்
அதிகப்படியான காஃபின் சிறுநீர் வழியாக கால்சியம் இழப்பை விரைவுபடுத்துகிறது.
குறிப்பாக, எனர்ஜி பானங்கள் அதிக காஃபின் மற்றும் சர்க்கரையை கொண்டுள்ளதால், அவை எலும்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
5. பேக்கரி உணவுகள்
வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரிகள் மற்றும் பிஸ்கட்களில் எலும்புகளுக்கு தேவையான மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இல்லை.
இவற்றை சாப்பிடுவதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களை இழந்துவிடுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |