உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக (140/90 mmHg அல்லது அதற்கு மேல்) இருப்பது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வதுதன் மூலம் இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
அந்தவகையில், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
1. வாழைப்பழம்- பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் இருக்கும் சோடியத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
2. டார்க் சாக்லேட்- மக்னீசியம் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளதால், இரத்த நாளங்கள் தளர்ந்து இரத்த ஓட்டம் சீராகும்.
3. பீட்ரூட்- நைட்ரேட்டுகள் உள்ளதால், இது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
4. மாதுளை- ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இது இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்க உதவும்.
5. இஞ்சி- இயற்கையான மருந்து போல செயல்பட்டு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |