உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் படிந்து, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க ஒரு காரணமாகும்.
எனவே, கொழுப்பு குறைந்த மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
மேலும், தினசரி உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் பெறுவது மற்றும் உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது முக்கியம்.
அந்தவகையில், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
1. அவகேடோ
அவகேடோ பழத்தில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாச்சுரேட்டட் கொழுப்புகளுக்கு மாற்றாக செயல்பட உதவுகின்றன.
மேலும், இதில் உள்ள தாவர ஸ்டெரோல்கள் குடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதை குறைக்க உதவுகின்றன.

2. பாதாம் மற்றும் அக்ரூட் பருப்பு
பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.
மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவுகின்றன.

3. பருப்பு மற்றும் பயறு வகைகள்
கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா மற்றும் பல்வேறு பயறு வகைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான மண்டலத்தில் கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்க உதவுகிறது.

4. கொழுப்பு நிறைந்த மீன்கள்
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவுகின்றன.
எனவே, உணவில் கொழுப்பு நிறைந்த மீன்களை சேர்த்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

5. ஆலிவ் ஆயில்
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |