மூளையின் திறனை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
உடல் நலம் என்பது நாம் அனைவரும் பேணிக் காக்க வேண்டிய ஒன்றாகும். அப்படிப்பட்ட உடல் நலத்துடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கிறது மூளை.
இது சரியாக வேலை செய்யவில்லை என்றால், பெரும்பாலான விஷயங்கள் நேர்மாறாக நடந்துவிடும். இவற்றை சரிசெய்ய சில உணவு முறைகள் உள்ளன.
சரியான உணவு முறைகள், உடல் நலத்தை பேணிக்காத்து, மூளை திறனை வலுவாக்குகிறது. அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலம்.
ப்ளூபெர்ரீஸ்
ப்ளூபெர்ரீஸ் ஆண்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் நிறைந்தாகும். குறிப்பாக இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் அறிவாற்றல் செயல்திறனுடன் தொடர்புடையவை ஆகும். அவை ஆண்டி-ஆக்சிடண்ட் குறைபாட்டைக் குறைக்க உதவுகின்றன.
மீன்கள்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஆதாரமாக இருக்கும் மீன்கள் மூளை அமைப்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன. மேலும் அறிவாற்றலை ஊக்குவிக்க உறுதுணையாக இருக்கின்றன.
ப்ரோக்கோலி
ஆண்டி-ஆக்சிடண்டுகள், வைட்டமின் கே அதிகம் நிறைந்த ப்ரோக்கோலி, மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இது மேம்பட்ட அறிவாற்றல் வழங்கும் காரணிகள் ஒன்றாக இருக்கிறது.
மஞ்சள்
மஞ்சளில் இருக்கும் குர்குமின், பல ஒவ்வாமைகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆண்டி-ஆக்சிடண்டுகளை வழங்குகிறது. மூளைக்கு தடையில்லாமல் ரத்தம் செல்ல பாதை அமைத்துத் தருகிறது. இதனால் ஏற்படும் நோய்களையும் தடுக்கும் திறன் கொண்டவையாக மஞ்சள் இருக்கிறது.
கொட்டைகள் மற்றும் விதைகள்
அக்ரூட் பருப்புகள், பாதாம், சியா விதைகள், ஆளிவிதை ஆகியவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகமாகக் கொண்டுள்ளன. மேலும், இதில் இருந்து வைட்டமின் ஈ சத்து உடல் ஆரோக்கியத்தையும், மூளை செயல்பாட்டையும் பாதுகாக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |