உடலில் உள்ள கொழுப்பை இயற்கையாக குறைக்க உதவும் 5 உணவுகள்: என்னென்ன தெரியுமா?
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பிரச்சனையாகும்.
அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற உடல் எடை அதிகரிப்பிற்கு பல காரணங்கள் உள்ளன.
அந்தவகையில், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 இயற்கை உணவுகள் குறித்து பார்க்கலாம்.
1. பூண்டு: பூண்டு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஒரு நல்ல மூலமாகும். இரவில் தூங்கும் முன் பூண்டு சாப்பிடுவது இரத்த ஓட்டம் மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2. . பார்லி: பார்லி ஒரு நல்ல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தானியமாகும். பார்லியில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ப்ரீபயாடிக் பீட்டா-குளுக்கன் உள்ளது.
3. திரிபலா: திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையாகும். இது உடலில் வீக்கத்தை நீக்குகிறது. மேலும், திரிபலா உடலில் கொழுப்பினைக் குறைக்க உதவுகிறது.
4. மோர்: பாரம்பரிய முறையில் மோர் தயாரித்து, பின்னர் அதில் மஞ்சள் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை மற்றும் அரைத்த இஞ்சி சேர்த்துக் குடித்து வர உடலின் கொழுப்பின் அளவு குறையும்.
5. நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நெல்லிக்காயை தினம் சாப்பிட அல்லது ஜூஸ் தயாரித்து குடித்து வர உடல் எடை குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |