மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழங்கள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக மலச்சிக்கலானது நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில், மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

என்னென்ன தெரியுமா?
1. கிவி- கிவி பழம் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த மிகவும் சத்தான பழம். தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை தடுக்கலாம்.
2. மஞ்சள் ட்ராகன்- இதனை தினமும் காலையில் பாதி சாப்பிட்டு வந்தால் குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் தடுக்கப்படும்.
3. ஆப்பிள்- ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
4. பெர்ரி- இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளன. எனவே இவற்றை காலை உணவாக உட்கொண்டால் மலச்சிக்கலை தடுக்கலாம்.
5. பேரிக்காய்- பேரிக்காயில் இயற்கை சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. மேலும் இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |