முதுமை தோற்றத்தை தாமதப்படுத்த உதவும் 5 விடயம்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக வயது அதிகரித்து செல்லும்போது முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முதுமை தோற்றத்தை தாமதப்படுத்த உதவும் 5 விடயம் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன தெரியுமா?
1. உடற்பயிற்சி- பல விதமான உடல் செயல்பாடுகள் மற்றும் தினசரி உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டம், தூக்கத் தரம், உடல் வலிமை ஆகியவற்றை மேம்படுத்தி, தோற்றத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டு முதுமையின் வேகத்தையும் குறைக்க உதவுகிறது.
2. போதுமான தூக்கம்- போதுமான உறக்கம் உடலை புதுப்பித்து, சுருக்கங்களை குறைத்து, மனத் தெளிவையும் ஆரோக்கியமான பளபளப்பையும் அதிகரித்து, முதுமையை தாமதப்படுத்த உதவுகிறது.
3. சீரான உணவுமுறை- சரியான உணவுமுறை ஓட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்து பொலிவான தோற்றத்தை ஊக்குவிக்கிறது.
4. நீர்சத்து- சரியான நீர்ச்சத்து சருமத்தின் பளபளப்பை தக்க வைத்திருக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் இது அதிகரிக்கிறது.
5. மன அழுத்தம்- நீண்ட கால மன அழுத்தம் சருமத்தின் முதுமையை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |