எலும்புகளை பலப்படுத்த பாலை விட கால்சியம் சத்து நிறைந்த 5 பானங்கள்: என்னென்ன தெரியுமா?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்களை அருந்துவதன் மூலமாக எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து நிறைந்த பானங்கள் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவியாக அமையும்.
எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து நிறைந்த 5 பானங்களை தினசரி அருந்தலாம். அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பால்
பாலில் கால்சியம் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் உள்ளன.
பால் என்றால் பசும்பால், சோயா பால், தேங்காய் பால் உள்பட அனைத்து விதமான பாலிலும் இந்தப் பலன்களை பெற முடியும்.
பச்சை ஸ்மூத்தி
பாலக்கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை போன்ற பச்சை நிற கீரைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திகளில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.
கால்சியம், ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை இதில் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி சமைத்து சாப்பிட்டால் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், விட்டமின் கே ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.
இதை தினசரி சாப்பிட்டு வர நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பற்சிதைவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ஆரஞ்சு ஜூஸ்
வீட்டில் தயாரிக்கப்படும் பிரெஷான ஆரஞ்சு ஜூஸில் அத்தியாவசிய தேவையான கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் உள்ளன. அவை எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.
க்ரீன் டீ
க்ரீன் டீ அருந்துவதால் உடல் சுறுசுறுப்பு அடையும் மற்றும் கால்சியம் சத்து தேவையும் பூர்த்தி அடையும். இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும். மேலும் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |