செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவும் காய்கறிகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து செரிமான பிரச்சனைககளும் ஏற்படும்.
ஏனெனில் குளிர்காலத்தில் உடலின் மெட்டபாலிசம் குறைவாகவும், நீரிழப்பும், மந்தத்தன்மை அதிகமாகவும் இருப்பதால், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்படி குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவும் 5 காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன காய்கறிகள்?
கேரட்- கேரட்டில் டயட்டரி நார்ச்சத்துக்களும், கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இது மலத்தை மென்மையாக்கும் மற்றும் குடலியக்கத்தை சீராக்கும்.
பசலைக்கீரை- இந்த கீரையில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இவை மலச்சிக்கலைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு- இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை குடலியக்கத்தை சீராக்குவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
முட்டைக்கோஸ்- முட்டைக்கோஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக்கும்.
பச்சை பட்டாணி- இதில் டயட்டரி நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. இதை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, நல்ல குடல் பாக்டீரியாக்களின் அளவுகளும் அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |