ஹொட்டலில் Mouth Freshener எடுத்துக்கொண்ட 5 பேருக்கு விபரீதம்.., மருத்துவர்கள் சொன்ன விடயம்
ஹொட்டல் ஊழியர் கொடுத்த Mouth Freshener -யை எடுத்துக்கொண்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு முடித்த 5 பேர், ஊழியர் கொடுத்த Mouth Freshener -யை எடுத்துக்கொண்ட பின்பு ரத்த வாந்தி எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அங்கித் குமார் என்பவர் பொலிஸில் கொடுத்த புகாரின்படி, கடந்த 2 -ம் திகதி இரவு செக்டார் 90-ல் உள்ள லாஃபோரெஸ்டா ஹொட்டலுக்கு தனது மனைவி மற்றும் 4 நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது, அவர்கள் ஹொட்டலில் சாப்பிட்டு முடித்த பின்னர் ஹொட்டல் ஊழியர் Mouth Freshener கொடுத்துள்ளார். அதனை எடுத்துக் கொண்ட 5 பேருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் ரத்த வாந்தி எடுத்துள்ளனர். இதனிடையே, அந்த ஹொட்டல் ஊழியர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மருத்துவர் கூறியது..
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் மருத்துவரிடம் அந்த Mouth Freshener பாக்கெட்டை காண்பித்தோம். அதை பார்த்ததும் அவர், இது ட்ரை ஐஸ் என்றும், மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய அமிலம் என்றும்" கூறினார்.
இதில், பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |