மாரடைப்பு வருவதை தடுக்கும் முக்கியமான 5 மீன்கள்
கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்னென்ன மீன்கள்?
தற்போதைய காலத்தில் மாரடைப்பு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கொலஸ்ட்ரால் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
சூரை மீன்
சூரை மீனானது கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
கானாங்கெளுத்தி மீன்
உலக அளவில் பரவலாக அறியப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்பு வருவதற்கு பெரும் எதிரியாக உள்ளது. இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது.
இறையன் மீன்
இறையன் மீனில் டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இதனை உட்கொண்டால் இதய நோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும். மேலும், நமது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
வெங்கணை அல்லது வெங்கணா மீன்
வெங்கணா மீனில் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த மீனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மத்தி மீன்
மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, செலினியம் போன்றவை அடங்கியுள்ளது. இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும். மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |