மது விற்பனையில் முன்னணியில் உள்ள மாநிலங்கள்.., தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்தாலும், மது விற்பனை இந்திய மாநில அரசுகளுக்கு முக்கி வருவாய் ஆதாரமாக உள்ளது.
மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்பதால், மாநிலங்கள் கலால் வரி மூலம் அதிக வருமானம் பெறுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மாநில நிதித் தரவுகளின் அடிப்படையில், மது விற்பனையில் அதிக வருமானம் ஈட்டும் 5 மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம்
ரூ.31,517.40 கோடி வருமானத்துடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தரவுகளின்படி, இம்மாநிலத்தில் 0.3% பெண்களும், 14.6% ஆண்களும் மது அருந்துகின்றனர்.
கர்நாடகா
ரூ.20,950 கோடி வருமானத்துடன் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 0.9% பெண்களும், 16.5% ஆண்களும் மது அருந்துவதாக தகவல் தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரா
ரூ.17,477.40 கோடி வருமானத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் அதிக நுகர்வு இருப்பதால் மாநிலத்தின் வருவாய் உயர்ந்துள்ளது. இங்கு 0.4% பெண்களும், 13.9% ஆண்களும் மது அருந்துகின்றனர்.
மத்தியப் பிரதேசம்
ரூ.11,873.70 கோடி வருமானத்துடன் மத்தியப் பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. அதன்படி, தரவுகளின்படி, 1% பெண்களும், 17% ஆண்களும் மது அருந்துகின்றனர்.
தமிழ்நாடு
மது நுகர்வு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. தரவுகளின்படி, மது விநியோகம் மூலம் தமிழ்நாடு சுமார் ரூ. 7,262.30 கோடி வருவாயை ஈட்டுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 0.3 சதவீதப் பெண்களும் 25.4 சதவீத ஆண்களும் மது அருந்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |