பிரித்தானியாவில் பாரிய விபத்தொன்றில் சிக்கிய இந்தியர்கள்: ஒருவர் பலி
பிரித்தானியாவில் நிகழ்ந்த பாரிய விபத்தொன்றில் சிக்கி இந்திய இளைஞர் ஒருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தொன்றில் சிக்கிய இந்திய இளைஞர்கள்
செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணியளவில், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள், இங்கிலாந்திலுள்ள Leicestershireஇல் காரில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விபத்தில், காரில் பயணித்தவர்களில் ஒருவரான Chiranjeevi Panguluri (32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
மற்ற நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காரை செலுத்திய சாரதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஆபத்தான வகையில் காரை செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களில் Pranavi என்னும் மாணவிக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. Badri என்பவருக்கும், Hemalaiah என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் ஐந்து பேரும் கார் ஒன்றில் தாங்கள் வேலை செய்யும் இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, மழையால் சாலை நனைந்திருந்ததால் வேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழக்க, சாலையோரமாக இருந்த ஒரு மரத்தில் மோதி காரை நிறுத்த முயன்றுள்ளார் சாரதி.
ஆனால், கார் சாலையை விட்டு விலகி, சறுக்கி, பள்ளம் ஒன்றில் சென்று விழுந்துள்ளது.
லேசான காயம் பட்ட Pranavi, காரிலிருந்து வெளியேறி, சாலைக்கு வந்து, ட்ரக் ஒன்றை நிறுத்தி உதவி கோர, அதன் சாரதி பொலிசாரை அழைத்துள்ளார்.
இந்த துயர சம்பவம் அந்த பகுதியிலும், அவர்கள் குடும்பங்களிலும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |