இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும் 5 பச்சை ஜூஸ்: என்ன தெரியுமா?
நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும் 5 பச்சை ஜூஸ் குறித்து விரிவாக காணலாம்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த கற்றாழை சாற்றை பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் சாற்றில் பாலிபெப்டைட்-பி உள்ளது, இது இன்சுலின் பொருளாகும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காய் சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது, சுரைக்காய் ஜூஸை குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
கீரை ஜூஸ்
கீரை சாறு நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
முருங்கை ஜூஸ்
முருங்கை சாற்றில் பல வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளதால், இது குளுக்கோஸ் அளவை சமநிலை படுத்த உதவுகிறது.
இதில் உள்ள சத்துக்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |