பிரான்சின் C நியூஸ் தொலைக்காட்சியை தடை செய்ய கோரி 5 லட்சம் பேர் கையெழுத்து
5 Lakh sign petition against france Cnews channel: பிரான்சின் C நியூஸ் தொலைக்காட்சியை தடை செய்ய கோரி 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இது தொடர்பான கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
தொலைக்காட்சியை தடை செய்ய கோரி கையெழுத்து
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான வலதுசாரி மற்றும் தீவிர பிற்போக்குத்தனம் கொண்ட கருத்துகளை வெளியிட்டு வரும் சி நியூஸ்(CNews) தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ரத்து செய்யுமாறு அதிக அளவிலான மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர்.
இது தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்ட கோரிக்கை மனுவில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கருப்பின நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த செய்தி தொலைக்காட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் அதிகமடைந்தது.

சி நியூஸ் செய்தி சேனலை தடை செய்யக் கோரும் கையெழுத்து மனு இயக்கம் ஜூன் மாதமே தொடங்கப்பட்டு இருந்தாலும், பாரிஸ் புறநகரின் ட்ராப்ஸ் மற்றும் லா வெரியேரில் பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு பிறகே வலுப்பெற்றது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 39 வயது பிரான்ஸ் நாட்டவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், சி நியூஸ் தொலைக்காட்சியின் தீவிரமான பார்வையாளர் என்று உள்ளூர் ஊடக அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சி நியூஸ் செய்தி நிறுவனமானது நடுநிலை செய்தி நிறுவனம் இல்லை. மாறாக அது அரசியல் பிரசார இயந்திரம் என்று இந்த நிறுவனத்திற்கு எதிராக திரண்டுள்ள மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.