விலை ரூ. 5 லட்சம் தான்., சராசரியாக 29 கி.மீ மைலேஜ்: இந்தியர்கள் அதிகம் விரும்பும் டாடா டியாகோ
இந்தியாவில் ஹேட்ச்பேக்(Hatchback Cars) கார்களுக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான இடமுண்டு. ஏனென்றால் இவை குறைந்த விலையில் கிடைப்பதோடு, சிறந்த எரிபொருள் சிக்கனம் வழங்குகிறது.
அத்துடன் நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக ஓட்டுவதற்கு வசதியாக இருக்கின்றன.
When the Tiago enters the scene, the Chill is seen 📈#Tiago #ItsAChillCar #TataTiago #TataMotorsPassengerVehicles pic.twitter.com/1ktrEgjwfz
— Tata Motors Cars (@TataMotors_Cars) March 26, 2025
இந்த காரணங்களாலேயே இந்திய வாடிக்கையாளர்கள் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அசத்தும் டாடா டியாகோ
இந்திய கார் சந்தையில் பல ஹேட்ச்பேக் கார்கள் பிரபலமாக இருந்தாலும், டாடா டியாகோ தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது.
இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்தும், வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக நீடிக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6,381 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 25% உயர்ந்து 7,946 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான டாடா கார்களின் பட்டியலில் டியாகோ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் இரண்டு இடங்களில் முறையே டாடா பஞ்ச் மற்றும் டாடா நெக்ஸான் கார்கள் உள்ளன.
டாடா டியாகோ-வின் அசத்தலான விலை
டாடா டியாகோ வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் கார் என இரண்டு விதமான எஞ்சின் விருப்பங்களில் கிடைக்கிறது.
இதன் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாய் மட்டுமே ஆகும். அதே நேரத்தில், இதன் உயர் ரக மாடலின் விலை 8.45 லட்ச ரூபாயாக உள்ளது.
மறுபுறம், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஓட்டுநர் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.
இதன் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாகவும், உயர் ரக மாடலின் விலை 11.14 லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டியாகோவின் மிரட்டும் மைலேஜ்
டாடா டியாகோ பெட்ரோல் மாடலைப் பொறுத்தவரை, சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.60 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில், 24 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் அதிகபட்சமாக 315 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |