வீட்டில் பணம் பெருக வேண்டுமா? சீன மக்கள் கடைபிடிக்கும் சாஸ்திரம் இதுதான்
China Feng Shui Tips: சீனாவில் பிரபலமாக பேசப்படும் ஃபெங் சூயி வாஸ்து குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் வாஸ்து சாஸ்திரம் எப்படியோ அதே போன்று சீன பாரம்பரிய நம்பிக்கையான ஃபெங் சூயி. ஃபெங் சூயி படி, எந்தெந்த பொருட்கள் வீட்டில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் ஈர்க்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சிரிக்கும் புத்தர்
சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல், செல்வம் மேம்படுவதுடன், நிதி ரீதியான நன்மையையும் அளிக்கின்றது. கையில் பணக்கட்டை வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் மகிழ்ச்சி அதிகரித்து நேர்மறை ஆற்றலும் பெருகுமாம்.

காற்று மணிகள் (Wind Chimes)
ஃபெங் குயி சாஸ்திரத்தின் படி, வீட்டில் காற்று மணிகளை தொங்கவிடுதால் எழும் இனிமையான ஒலி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது. இதனால் வீடும் செல்வ செழிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த காற்று மணிகளை பிரதான கதவு அல்லது ஜன்னல் அருகில் தொங்க விடவும்.

ஆமை
உலோக ஆமை பொம்மை வீட்டில் இருந்தால் மகிழ்ச்சி, செல்வம், முன்னேற்றம் இவைகள் பெருகும் என்று நம்பப்படுகின்றது. மேலும் வீட்டிலுள்ள குறைகளை போக்கவும், குடும்பத்தினர் ஆரோக்கியம் மேம்படவும் செய்கின்றது.
எதிரிகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். உலோக ஆமையை நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி ஜாடியில், வடக்கு திசையில் வைப்பது சிறந்தது.

ஃபெங் சூயி நாணயம்
ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி, சீன நாணயங்கள் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொடுப்பதுடன், வீட்டின் நுழைவாயிலில் தொங்க விடும்போது, வறுமை நீங்க செல்வம் மேம்படுமாம்.
இந்த நாணத்தினை வேலை செய்யும் இடத்தில் ட்ராயரில் 10 நாணயங்கள் கொண்ட தொகுப்பாக வைத்தால் கூடுதல் பனை அடைய முடியும்.

5. மூங்கில் செடி
வீட்டில் மூங்கில் செடி வைப்பது மங்களகரமானதாக கருதப்படுவதுடன், நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், வீட்டில் செல்வம், மகிழ்ச்சி இவைகள் பெருகுமாம். வீட்டில் அதிர்ஷ்டத்தினையும், முன்னேற்றத்தினையும் கொண்டு வருகின்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |