குடல் புற்றுநோயை எச்சரிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
புற்றுநோய் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், குடல் புற்றுநோயை எச்சரிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?
1. மலத்தில் இரத்தம்- மலத்தில் இரத்தக்கசிவை கண்டால் சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
2. மலத்தின் வடிவம்- மலத்தின் வடிவம் மற்றும் அளவில் மாற்றம் தெரிந்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
3. வயிற்று வலி- நாள்பட்ட வயிற்று வலியானது பெருங்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும். எனவே தொடர்ந்து வயிற்றில் அசௌகரியத்தை சந்தித்தால் மருத்துவரை அணுகுங்கள்.
4. எடை இழப்பு- எவ்வித முயற்சியையும் செய்யாமல் உடல் எடை குறைந்தால் பல்வேறு புற்றுநோய்களின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
5. உடல் சோர்வு- எக்காரணமும் இல்லாமல் அடிக்கடி உடல் சோர்வை சந்தித்தால், பெருங்குடல் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |