நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
5 member family death after eat noodles in noida: உத்தரப்பிரதேசத்தில், இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூடுல்ஸ் சாப்பிட்ட குடும்பம் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியை சேர்ந்த மகேஷின் குடும்பத்தினர் இன்று காலை முதல் யாரும் வீட்டிலிருந்து வெளியே வராத நிலையில், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ரபுபுரா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை குழுவினர் உடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு 37 வயதான மகேஷ், 37 வயதான அவரது மனைவி லலிதா, மகன்களான 11 வயது லட்டு மற்றும் 3 வயது சாக்ஷத், 7 வயதான மகள் மிஷ்டி ஆகிய 5 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.
தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அறிவியல் சான்றுகளை சேகரிததுள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அண்டை வீட்டில் வசிக்கும் மகேஷின் தாய் நேற்று 5 பேர் இரவு மணியளவில் நூடுல்ஸ் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். மகேஷின் தாய், அவர்களை இங்கு வாழ விடமாட்டேன் என்றும், எல்லா சொத்துக்களையும் தன் மகளின் பெயரில் எழுதி விடுவதாகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே எல்லா சொத்துக்களையும் தன் மகளின் பெயரில் எழுதி விட்டார்.
வீட்டை விட்டு வெளியேறுமாறு அவர்களிடம் கூறினார். மகேஷின் தாய், அவர்கள் திருவிழா சென்றுவிட்டு வீடு திரும்பியதும், மேகி சமைத்து அனைவருக்கும் பரிமாறினார். அவர்கள் தினமும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்" என கூறினர்.
முதற்கட்ட விசாரணையின் படி, அவர்கள் உண்ட உணவு நஞ்சாக மாறியிருக்கலாம் என காவல்துறையினர் யூகிக்கின்றனர்.
உணவு மாதிரிகளை சேகரித்துள்ள உணவுப் பாதுகாப்புத் துறையினர், குடும்பத்தினர் உட்கொண்ட உணவில் ஏதேனும் நச்சுப் பொருள் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மரணங்கள் நிகழ்ந்தனவா என்பதைக் கண்டறிய ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.