உங்களுக்கு முகப்பரு வரவே கூடாதா! இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்
பொதுவாக புதினா ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவியாக இருக்கின்றது. குறிப்பாக முகத்தில் அதிகப்படியான முகப்பருக்கள் காணப்பட்டால் அதைப் போக்க புதினா இலை உதவுகிறது.
ஏனெனில் புதினா ஒரு இயற்கையான கிருமி நாசினியாகவும் சரும அழற்சியை போக்கக் கூடியதாகவும் உள்ளது. புதினாவைக் கொண்டு உங்க முகத்தில் உள்ள தழும்புகளை போக்க முடியும்.
இதில் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து சருமத் துளைகளில் உள்ள அடைப்பை நீக்குகிறது.
கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த பேஸ் பேக்குகளை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே புதினா பேஸ் பேக்குகளை தயாரித்து பயன் பெறலாம். அந்தவகையில் தற்போது புதினா பேஸ் பேக்குகளை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
- 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதனுடன் புதினா இலைகளை நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் வரை உலர விட்டு கழுவுங்கள். நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
- வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை ஒன்றாக அரைத்து முகத்தில் அப்ளே செய்யுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். புதினா உங்களுக்கு புத்துணர்ச்சியான முகத்தை தரும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.
- புதினா இலைகளை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து முகத்தில் பேஸ்பேக்அப்ளே செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
- புதினா இலைகளை எடுத்து அதை நன்றாக நசுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் வெள்ளரிக்காய் ஜூஸ், ஊற வைத்த ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து கழுவிடுங்கள். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதோடு எண்ணெய் இல்லாத சருமத்தை தரும்.
- புதினா இலைகளை நன்றாக நசுக்கி அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதனுடன் சிறுதளவு கடலை மாவு சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளே செய்து 1/2 மணி நேரம் உலர விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.