இதய நோயை உண்டாக்கும் முக்கியமான 5 பழக்கங்கள்.., என்னென்ன தெரியுமா?
சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதய நோய் என்பது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
அந்தவகையில், இதய நோயை உண்டாக்கும் முக்கியமான 5 பழக்கங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது- ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், உடலின் இரத்த ஓட்டம் குறையும், கெட்ட கொழுப்பு அப்படி உடலில் படிந்து தேங்க ஆரம்பித்துவிடும் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
2. போதுமான தூக்கமின்மை- தேவையான அளவு தூங்காமல் போனால், அதன் விளைவாக இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் உடலினுள் அழற்சி அதிகரித்து, இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
3. அறிகுறிகளை புறக்கணிப்பது- உடல் சோர்வு, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, அடிக்கடி படபடப்பு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் இதய நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும்.
4. ஆரோக்கியமற்ற உணவுகள்- பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், கார்ன் ப்ளேக்ஸ் போன்றவற்றில் சர்க்கரை அதிகளவு உள்ளது. இவை அனைத்தும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
5. மன அழுத்தம்- மன அழுத்தத்தில் இருக்கும் போது கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்படும். அதுவும் இந்த மன அழுத்தம் நாள்பட்ட நிலைக்கு மாறும் போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |