லூவ்ரே அருங்காட்சியகம் கொள்ளை: கூடுதலாக 5 முக்கிய சந்தேக நபர்கள் கைது
லூவ்ரே அருங்காட்சியகத்தில்(Louvre Museum) நடந்த திருட்டு சம்பவத்தில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு
பாரிஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அப்பல்லோ காட்சி அரங்கிற்குள் புகுந்து பேரரசர் நெப்போலியன் மற்றும் பேரரசிக்குரிய ஒன்பது நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

கழுத்து ஆபரணம்(Necklace) கிரீடம்(Tiara) மற்றும் ப்ரொச்(Brooch) என சுமார் $102 மில்லியன் மதிப்புள்ள அரிய பொருட்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்டுள்ளன.
இதையடுத்து லூவ்ரே அருங்காட்சியகத்தில்(Louvre Museum) நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய உயிர்க்கொல்லி தாக்குதல்: தீப்பிடித்து எறிந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல்
மேலும் 5 பேர் கைது
இந்நிலையில் லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டு இருப்பதாக பாரிஸ் காவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையான மேற்கொள்ளப்பட்டதாக பொது வழக்கறிஞர் லாரே பெக்குவாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் ஆரம்பக்கட்ட விசாரணையில் CCTV காட்சிகளில் சிக்கிய 4 பேரை தவிர மேலும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |