வயிற்றை சுத்தம் செய்ய உதவும் இயற்கை பானங்கள்.., காலையில் குடிக்கலாம்
மனித உடலின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தூய்மையான தண்ணீரே மிகச் சிறந்த மற்றும் அவசியமான பானமாகும்.
ஆனால் அதனுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்து குடித்தால், செரிமான ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
அடிக்கடி மலச்சிக்கல், வாய்வு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சில இயற்கை பானங்களை குடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
அந்தவகையில், வயிற்றை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை பானங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1. எலுமிச்சை - தேன் நீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கல், வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும். மேலும் சரும பொலிவையும் அதிகரிக்க உதவுகிறது.
2. நெய் கலந்த வெதுவெதுப்பான நீர்
ஒரு டீஸ்பூன் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது குடல் இயக்கத்தை சீராக்கவும், கழிவுகள் எளிதாக வெளியேறவும் உதவும். இருப்பினும், உயர் கொலஸ்ட்ரால் அல்லது ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இதை குடிக்க வேண்டும்.
3. சைலியம் (இசப்கோல்)
ஒரு ஸ்பூன் சைலியத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
4. சோம்பு அல்லது சீரக நீர்
சிறிதளவு சோம்பு அல்லது சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலையில் குடிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அசிடிட்டி, வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |