உங்கள் தொப்பை குறைய வேண்டுமா? காலையில் எழுந்து இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்
பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே அமைகிறது. அதாவது, வெறும் உடற்பயிற்சி கொண்டு மற்றும் நாம் இந்த வயிற்றுப்புண் குறைத்து விட முடியாது.
சரியான பழக்க வழக்கங்கள் வழியாகத்தான் இதனை நாம் சரி செய்ய முடியும். அது முக்கியமாக நாம் காலை நேர பழக்கங்களில் செய்யும் விஷயங்களில் தொடங்கி முக்கிய பங்கு வகிக்கின்றன.
காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றங்கள் நம்முடைய உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் வழியாக நமது கொழுப்பை எளிதில் கரைத்து விட முடியும். அப்படியாக, நாம் காலையில் எழுந்து செய்யக்கூடிய ஒரு ஐந்து முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி பார்ப்போம்.

1) வெதுவெதுப்பான நீர் அருந்துதல்:
காலையில் எழுந்தவுடன் முதலாவதாக வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது அவசியம். நம்முடைய உடலில் மெட்டபாலிசத்தை 30 சதவீதம் வரை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்றுவதோடு தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.
2) சூரிய ஒளியில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி:
அதேபோல், காலை நேர சூரிய ஒளிகள் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, தொப்பை கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
3) அதிக புரதம் நிறைந்த காலை உணவு:
காலையில் முக்கியமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு முட்டை, முளைகட்டிய பயறுகள், பன்னீர் அல்லது ஓட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது நம்முடைய வயிற்றை நீண்ட நேரம் பசியின்மையோடு வைப்பதோடு தொப்பையை குறைக்க உதவுகிறது.

4) காலை நேர தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம்:
காலையில் எழுந்தவுடன் நிச்சயமாக உங்களுக்கான நேரமாக ஒரு பத்து நிமிடங்கள் செலவு செய்வது அவசியம். அதில் நீங்கள் தியானமும் மூச்சு பயிற்சி செய்வது மிக மிக முக்கியம். இது நம்முடைய உடலிம் அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை குறைக்கிறது. அந்த அளவு குறையும்போது அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை இயற்கையாகவே தடுக்கப்படுகிறது.
5) காலை எடையைச் சரிபார்த்தல்:
மேலும், காலை எழுந்தவுடன் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெறும் வயிற்றில் உடல் எடையை சரி பார்ப்பது வழக்கமாக மாற்றிக் கொள்ளும் பொழுது நாம் உடல் எடையை பற்றிய ஒரு விழிப்புணர்வு உண்டாகும். அதனால், அந்த நாள் முழுவதும் நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து கட்டுப்பாடோடு இருப்பதற்கு ஒரு வழி வகுக்கும்.