எலும்பை வலுவாக்க உதவும் 5 இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவியாக அமையும்.
அந்தவகையில், எலும்பை வலுவாக்க உதவும் 5 இயற்கை உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1. எள்ளு விதைகள்
கால்சியம் அதிகமாக உள்ள எள்ளு விதைகள் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
மேலும் இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

2. ராகி
மற்ற தானியங்களை விட அதிக கால்சியம் கொண்ட ராகி எலும்பை வலுவாக்க உதவும்.
100 கிராம் ராகியில் சுமார் 344 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

3. பன்னீர்
கால்சியம் நிறைந்த உணவான 100 கிராம் பன்னீரில் சுமார் 200–250 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

4. பாதாம்
பாதாமிலும் கால்சியம் அதிகமாக உள்ளது. 100 கிராம் பாதாமில் சுமார் 264 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
இதில் வைட்டமின் E, மக்னீசியம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன.

5. முருங்கைக்கீரை
கால்சியம் மிக அதிகமாக உள்ள 100 கிராம் முருங்கைக்கீரையில் சுமார் 440 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |