கண் இமை முடிகள் அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த 5 டிப்ஸ் போதும்
முக அழகிலேயே மிகவும் முக்கியமானது கண்களும், கண் இமைகளும்தான்.
சிலருக்கு கண் இமை முடிகள் அடர்த்தியாகவும் வசீகரமாகவும் இருக்கும். இன்னும் சிலருக்கு மிகவும் குறைவாகவும், சின்னதாகவும் இருக்கும்.
இயற்கை முறையில் மிகவும் எளிதாக கண் இமைகளை அடர்த்தியாக வளர்க்க முடியும். அதற்கான 5 டிப்ஸ்கள் இதோ.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கண் இமை வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பருத்தி துணியைப் ஆமணக்கு எண்ணெயில் தொட்டு கண் இமைகளில் தடவவும். இரவு முழுவதும் எண்ணெயை விட்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உள்ள லாரிக் அமிலம் ஆரோக்கியமான முறையில் கண் இமை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
பருத்தி துணியைப் தேங்காய் எண்ணெயில் நனைத்து கண் இமைகளுக்கு தடவவும். இரவு முழுவதும் எண்ணெயை விட்டு, காலையில் கழுவி விட வேண்டும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் ஏபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது. இது மயிர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கவும் பயன்படுகிறது.
ஒரு கப் கிரீன் டீயைக் காய்ச்சி அறியபின்பு அதில் பருத்தி துணியை நனைத்து,கணிமைகளில் தடவ வேண்டும். இதை 20 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
கற்றாழை
கற்றாழையில் ஈரப்பதமூட்டும் பண்புகள் இமைமுடிகள் உடைவதைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியமான கண் இமை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கற்றாழை ஜெல்லை, சுத்தமான பருத்தி துணியில் நனைத்து கண் இமைகளில் தடவவும். 30 நிமிடங்களுக்கு அதை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
சரியான ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வதால் கண்கள் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
சரியான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான கண் இமை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் மீன் உணவுகளை அதைகமாக சாப்பிடுதல் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |