இதயத்தை சேதப்படுத்தும் 5 எண்ணெய்கள்.., இருதயநோய் நிபுணர் எச்சரிக்கை
சமையலறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சில எண்ணெய்கள் இதயத்தை சேதப்படுத்துகின்றன என்று பராஸ் ஹெல்த் நிறுவனத்தின் இருதயவியல் துறையின் இயக்குநரும் பிரிவுத் தலைவருமான டாக்டர் அமித் பூஷண் சர்மா எச்சரித்துள்ளார்.
இந்த எண்ணெய்கள் நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்புகளால் அதிகமாக நிரம்பியுள்ளன. மேலும், அதிக அளவில் பதப்படுத்தப்படுகின்றன, இதனால் அவை அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழந்து தீங்கு விளைவிக்கும் சேர்மங்களைப் பெறுகின்றன.
காலப்போக்கில் இவை அதிக கொழுப்பு, அடைபட்ட தமனிகள், நாள்பட்ட வீக்கம், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
டாக்டர் சர்மா கூறும் எண்ணெய்கள்
1. ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் (வனஸ்பதி / டால்டா):
டிரான்ஸ் கொழுப்புகளைக் கொண்டுள்ள இந்த ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் கெட்ட (LDL) கொழுப்பை அதிகரித்து நல்ல (HDL) கொழுப்பைக் குறைப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்கிறது .
2. பாமாயில்:
நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து தமனி பிளேக்கை உருவாக்குகிறது.
3.தாவர எண்ணெய்:
சூரியகாந்தி, சோயாபீன், சோள எண்ணெய்களை பயன்படுத்தினால் ஊட்டச்சத்துக்களை நீக்கி வீக்கம் உண்டாவதாக கூறுகிறார் இருதயநோய் நிபுணர்.
4. பருத்தி விதை எண்ணெய் (Cottonseed oil)
அதிக பதப்படுத்தப்பட்ட பருத்தி விதை எண்ணெய்யை பயன்படுத்தினால் கொழுப்பு நிலை மாறும் என்கிறார் என்கிறார் மருத்துவர் சர்மா.
5. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யை ஆரோக்கியம் என்று கூறினாலும் அதில் 90 சதவீத நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் தீங்கு விளைவிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |