மீண்டு வரும் பிரித்தானியா! ஒற்றை இலக்கமாக மாறிய கொரோனா பலி: விரைவில் சகஜ நிலை திரும்ப வாய்ப்பு
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக உள்ளதால், விரைவில் பிரித்தானியா சகஜநிலைக்கு திரும்பலாம் என்று நம்பப்படுகிறது.
கொரோனாவால் அதிகம் பாதித்த ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று, இங்கு ஒவ்வொரு நாளும் கொரோனா உச்சத்தின் போது, 5000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஆனால், தற்போது கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசியின் பயனாக பிரித்தானியாவில் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி பார்த்தால், கடந்த வாரம் 14560 பேர் பாதிக்கப்பட்டனர்.
பாதிப்பு 5.2 சதவீதமாக குறைந்திருந்தது. தற்போது அதுவே கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
 
பாதிப்பு 26.2 சதவீதம் முற்றிலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் திகதி மருத்துவமனையில் 101 பேர் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின் யாரும் அனுமதி ஆனது போன்று எந்த தரவும் இல்லை. பிரித்தானியாவில் தற்போதுவரை 35,000,000 பேர் அதாவது மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அதே சமயம் 17,000,000 பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் பிரித்தானியாவில் இப்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது.
 
 
அதில் முதல் படி வரும் 12-ஆம் திகதி ஒரு 12 நாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில்5 பேர் பலியாகியுள்ளனர். 2,047 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        