சென்னை விமான சாகச நிகழ்வில் 5 பேர் மரணம்.., முறையான ஏற்பாடுகள் இல்லை என புகார்
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 பேர் மரணம்
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த நிகழ்வின் போது திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த நிகழ்வானது 11 மணிக்கு தொடங்கிய 1 மணிக்கு முடிந்த நிலையில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் மக்கள் ஸ்தம்பித்தனர்.
பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். வெயிலில் பலரும் மயக்கம் அடைந்தனர்.
ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்விற்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |