அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களுக்கு நீதிமன்ற காவல்
தமிழக மாவட்டமான சிவகங்கை, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றிருந்தனர்.
பின்னர் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் எழுப்பியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இவரது மரண வழக்கு தொடர்பாக தற்போது கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அஜித்குமாரின் பிரேத பரிசோதனைக்கு பிறகு மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |