உடல் எடையை குறைக்க உதவும் 5 வேர் காய்கறிகள்
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் காய்கள் மற்றும் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் 5 வேர் காய்கறிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆற்றலை அளிக்கின்றன.
மேலும், பீட்ரூட் கல்லீரலில் உள்ள நச்சுக்களை இயற்கை முறையில் வெளியேற்ற உதவுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.
சர்க்கரைவள்ளி
கிழங்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் இது நீண்ட நேரத்திற்கு வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நூல்கோல்
நூல்கோலில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, செரிமானத்தை சீராக்குகிறது.
இதன் மூலம் இது எடை இழப்புக்கும் தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்.
கேரட்
கேரட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பீட்டா கரோட்டின் வயிற்றில் முழுமையான உணர்வு உருவாகிறது.
இதனால், நாம் ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதனால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
முள்ளங்கி
முள்ளங்கியில் உள்ள அதிகளவு நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
முள்ளங்கி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. இதனை உட்கொள்வதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.