மழைக்காலத்தில் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 வேர் காய்கறிகள்: என்னென்ன தெரியுமா?
மழைக்காலத்தில் நோய்களிடமிருந்து நம் உடலை பாதுகாக்க நோய்யெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்று.
இயற்கையாகவே நம் உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்தவகையில் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 வேர் காய்கறிகளை பற்றி பார்க்கலாம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்துக்கள், வைட்டமின் C, மாங்கனீசு, வைட்டமின் A நிறைந்துள்ளன.
மேலும் இதில் பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் ஆசிட் அந்தோ சையானின்கள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் பெருமளவு காணப்படுகின்றன.
குளிர்காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு செரிமான ஆரோக்கியத்திற்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சிறந்தது.
பீட்ரூட்
பீட்ரூட் ஊட்டச்சத்து நிறைந்த வேர் காய்கறிகளில் முக்கியமான காய்கறியாக அமைகிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரைட்டுகள் அதிகம் உள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆக்சிடன்ட்களில் ஜிஞ்சரால் என்ற காம்பவுண்ட் அதிக அளவில் உள்ளது. இது குடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
அதோடு உணவு குழாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பண்புகள் இஞ்சியில் உள்ளது.
மேலும் மைக்ரேன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை உணவில் சேர்த்து வருவதன் மூலமாக அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.
நூல்கோல்
நூல்கோல் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிறைந்த வேர்க் காய்கறிகளில் ஒன்று.
இதில் வைட்டமின் C, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக நூல்கோல் அமைகிறது. மேலும் வைட்டமின் C நிறைந்த உணவுகளை உணவில் சேர்ப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்படுகிறது.
கேரட்
கேரட்டில் கராட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பாலிஅசிட்டலீன்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. மேலும் கேரட் நமது கண்களின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்கிறது.
இந்த ஊட்டச்சத்துக்கள் ஆன்டிஆக்சிடன்ட்களாகவும், புற்றுநோயை எதிர்த்து போராட கூடிய ஆன்டி கார்சினோஜென்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் செயல்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |