எளிய முறையில் லட்சங்களில் சம்பாதிக்கும் 5 ரூபாய் டீ வியாபாரி.., அவரது யுக்தி இது தான்
5 ரூபாய் டீ வியாபாரி ஒருவர் தனது புதுமையான அணுகுமுறையில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
டீ வியாபாரி
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, தாராஷிவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் நானாமாலி. இவர் 3 -ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார்.
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவராக மகாதேவ் இல்லை. அதற்கு மாறாக, தனது கிராமத்தை சுற்றி இருக்கும் 15 ஆயிரம் மக்களிடம் தொலைபேசியில் பேசி ஓர்டர் எடுத்து புதுமையான முறையில் வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும், அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் வழங்குகிறார். இதனால் அவருக்கு தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது.
இவருக்கு தேவையான உதவிகளை மனைவி மற்றும் 2 மகன்கள் செய்கின்றனர். தினமும் 3 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார்.
அதன்படி, தினமும் 2 ஆயிரம் கப் டீ வரை விற்பனை செய்கிறார். இவரது தினசரி வருமானம் மட்டுமே டீ விற்று ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இருக்கிறது. அந்தவகையில் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |