60 வயதிலும் முடி கொட்டாமல் இருக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், 60 வயதிலும் முடி கொட்டாமல் இருக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
முட்டை- இதில் நிறைந்துள்ள புரதம், பயோட்டின், வைட்டமின்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியாக வளர உதவுகிறது.
பசலைக் கீரை- இதில் உள்ள வைட்டமின் A, C, ஃபோலேட், இரும்புச் சத்து முடி உதிர்வைத் தடுத்து, உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு- பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் C நிறைந்த இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியை வலுப்படுத்துகிறது.
தயிர்- தயிரை உணவில் சேர்த்தால் முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகை குறைத்து, முடியை மென்மையாக்குகிறது.
நெல்லிக்காய்- வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் முடி உதிர்வை குறைத்து, முடி உடைவதைத் தடுக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |