டெல்லியில் சுத்தமான காற்றை விற்கும் 5 ஸ்டார் ஹொட்டல்கள்
டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பதிவான நிலையில் சுத்தமான காற்றை விற்கும் ஹொட்டல்கள் குறித்த தகவல் பதிவாகியுள்ளது.
சுத்தமான காற்றை விற்கும் ஹொட்டல்
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமாக பதிவாகியுள்ளது. இதனால், அங்குள்ள மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மேலும், காற்றின் தரக்குறியீடு மோசமானதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹொட்டல்களில் சுத்தமான காற்று சேவையாக விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அமெரிக்காவில் முதலீட்டாளராக இருக்கும் டெபர்கியா தாஸ் என்பவர், டெல்லியில் உள்ள தாஜ் ஹொட்டலில் இருக்கும் அறிவிப்பை காட்டுகிறார்.
மற்றொரு பயனர் ஒருவர், "ஹொட்டலில் உள்ள விருந்தினர் அறையில் காற்று தரக்குறியீடு 58 ஆக இருந்தது. ஆனால், நகரத்தில் காற்று தரக்குறியீடு 397 வரை இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டெல்லியில் சுத்தமான காற்று ஒரு பிரீமியம் சலுகையாக மாறியுள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |