ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற 5 சூப்பர் பைக்குகள்
பண்டிகை காலம் வருவதால் வாடிக்கையாளர்கள் பைக்குகளை வாங்க ஆர்வம் காட்டும் நேரத்தில் விலை குறைந்த பைக்குகளை பார்க்கலாம்.
ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125)
ஹோண்டா நிறுவனத்தின் Honda SP 125 பைக்கானது 123.94 cc air-cooled engine-யை கொண்டுள்ளதால் 10.9 எச்பி பவரையும் 10.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
Bluetooth உடன் 4.2-inch TFT display வழங்கப்பட்ட இந்த பைக்கின் விலையானது ரூ.93,247 ஆகும்.
டிவிஎஸ் ரைடர் 125 (TVS Rider 125)
டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய TVS Rider 125 பைக்கானது 124.8 cc single cylinder engine-யை கொண்டுள்ளது. இது, 11.4 எச்பி, 11.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்
LCD Display பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கில் Eco மற்றும் Power ஆகிய Modes உள்ளன. இந்த பைக்கானது ரூ1.02 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் (Hero Xtreme 125R)
Hero Xtreme 125R பைக்கானது 124.7 cc air-cooled single cylinder engine- யை கொண்டுள்ளதால் 11.5 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த பைக்கானது ரூ.1 லட்சத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125)
பஜாஜ் நிறுவனத்தின் Bajaj Pulsar 125 பைக்கில் 124.4 cc single cylinder engine பொருத்தப்பட்டுள்ளதால் 11.8 எச்பி பவரையும் 10.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் விலை ரூ.85,178 ஆகும்.
பஜாஜ் பல்சர் என்125 (Bajaj Pulsar N125)
Bajaj Pulsar N125 பைக்கில் 125 சிசி இன்ஜின் இருந்தாலும் 12 எச்பி பவரையும் 11என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.93,158 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |