வெளிநாட்டில் படகு விபத்தில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்கள்: அரசு வெளியிட்டுள்ள தகவல்
சுவிஸ் நாட்டவர்கள் சிலர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள தகவல்
சுவிஸ் நாட்டவர்கள் சிலர் இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள செஷல்ஸ் தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 13ஆம் திகதி, அவர்கள் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்தில் உயிர் தப்பிய சுவிஸ் நாட்டவர்கள் ஐந்து பேரும் சுவிட்சர்லாந்துக்கு திரும்பிவிட்டதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |