ட்ரம்பின் வரிவிதிப்பால் கனடாவில் விலை உயர்ந்துள்ள ஐந்து விடயங்கள்
அமெரிக்காவின் வர்த்தக் கூட்டாளர் நாடுகள் மீது அந்நாட்டின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சகட்டுமேனிக்கு வரிகள் விதித்துவருகிறார்.
சமீபத்தில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் ட்ரம்ப்.
வரிவிதிப்பால் விலை உயர்ந்துள்ள விடயங்கள்
ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது கனடா வரிகள் விதித்துள்ளது.
இந்த வரிவிதிப்பால், என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளன என்று பார்க்கலாம்.
1. ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷின் மெஷின்கள்
ஃப்ரிட்ஜ், ஃப்ரீஸர் ஆகிய உபகரணங்கள் 2 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளன.
டிஷ் வாஷர் முதலான உபகரணங்கள் 4.5 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளன.
விடயம் என்னவென்றால், கனடாவில் விற்கப்படும் இந்த உபகரணங்கள் எல்லாமே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை அல்ல.
ஆக, கனடா மக்கள் அவற்றிற்கு மாற்றாக கனேடிய உபகரணங்களை வாங்கினால் இந்த விலை உயர்விலிருந்து தப்பலாம்.
2. புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள்
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது அமெரிக்கா 25 சதவிகித வரிகள் விதித்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கனடா வரி விதித்ததால், கனடாவில் கார்கள் விலை 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
3. பீனட் பட்டர், கேன்களில் அடைக்கப்பட்ட சூப் மற்றும் பிற மளிகைப் பொருட்கள்
பழச்சாறுகள் விலை 7.5 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கேன்களில் அடைக்கப்பட்ட சூப் 8 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.
டொமாட்டோ கெச்சப், சாஸ், பீனட் பட்டர், ஜாம், வான்கோழி, பாஸ்தா மற்றும் ஆரஞ்சுகள் விலையும் அதிகரித்துள்ளது.
4. உடைகள் மற்றும் காலணிகள்
உடைகள் மற்றும் காலணிகள் விலைகள், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
5. கட்டுமானப் பணி
வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கண்ணாடி ஜன்னல்கள், கம்பள விரிப்புகள் முதலான விடயங்கள் விலை அதிகரித்துள்ளதுடன், பிளம்பிங் முதலான பணிகளுக்கான செலவும் அதிகரித்துள்ளது.
மேலும், அமெரிக்கா கனடாவுக்கிடையிலான இந்த வர்த்தகப்போரால், கனேடிய பொருளாதார வளர்ச்சியிலும் வீடுகள் வாங்குதல், விற்றல் மற்றும் கட்டுதல் ஆகிய பணிகளிலும் தொய்வு ஏற்படும் என்றும் துறைசார் வல்லுநர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |