வாஸ்து: காலையில் எழுந்ததும் இந்த 5 விடயங்களை பார்த்தால் கஷ்டம் வருமாம்
நம்பிக்கையின்படி, நமது உள்ளங்கையில் லட்சுமி தேவி வசிப்பதாக கூறப்படுகிறது.
இதனால், பெரியவர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கச் சொல்கிறார்கள்.
ஆனால் காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாத சில விடயங்கள் நம் அன்றாட வழக்கத்தில் உள்ளது.
காலையில் எழுந்ததும் பார்க்கக்கூடாத 5 விடயம்
1. நிறுத்தப்பட்ட கடிகாரம்: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட அல்லது சேதமடைந்த கடிகாரத்தை வைக்கக் கூடாது. இதை அதிகாலையில் பார்த்தால், வாழ்க்கையில் பெரிய பிரச்சனை வரப்போகிறது என்பதற்கான அறிகுறி.
2. உடைந்த சிலைகள்: காலையில் எழுந்ததும் உடைந்த சிலைகளைப் பார்க்கக் கூடாது. இது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
3. உடைந்த கண்ணாடி: உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைக்கக் கூடாது. காலையில் எழுந்தவுடன் அத்தகைய கண்ணாடியைப் பார்ப்பது துரதிர்ஷ்டத்தைத் தரும்.
4. நிழல்: காலையில் எழுந்தவுடன் நிழலை பார்க்கக் கூடாது. காலையில் கண்களை திறந்தவுடன் நிழலைக் கண்டால், அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை தரலாம்.
5. உடைந்த பாத்திரங்கள்: காலையில் எழுந்ததும் உடைந்த மற்றும் அழுக்குப் பாத்திரங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |