உடலின் இந்த 5 இடங்களில் வலி இருக்கிறதா? புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்
5 Types of Persistent Pain That Could Be Warning Signs of Cancer- நமது அன்றாட வாழ்க்கையில் தலைவலி, முதுகுவலி, வயிற்றுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது.
வேலைப்பளு, பயணம் மற்றும் உடல் சோர்வு காரணமாக இதுபோன்ற வலிகள் ஏற்படலாம்.
இந்நிலையில், உடலின் சில பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் வலி, புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும்.
அந்தவகையில், உடலின் இந்த 5 இடங்களில் வலி ஏற்பட்டால் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

1. முதுகுவலி- கணையம், மார்பகம், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களிலும் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் வலி அதிகரிப்பது, பசியின்மை, உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
2. வயிற்றுவலி- வயிற்றுவலி தொடர்ந்து நீடித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அலட்சியம் செய்யக்கூடாது. இது கல்லீரல், பெருங்குடல் அல்லது கருப்பை புற்றுநோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
3. தலைவலி- முன்பு இல்லாத வகையில் புதிதாகத் தலைவலி ஏற்பட்டு, தொடர்ந்து நீடித்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பார்வைக் குறைபாடு, ஞாபக மறதி மற்றும் நடத்தையில் திடீர் மாற்றங்கள் போன்றவையும் மூளைக் கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
4. எலும்பு மற்றும் மூட்டு வலி- வயது அதிகரிக்கும்போது மூட்டு வலி ஏற்படுவது பொதுவானது. இருப்பினும், குறிப்பிட்ட எலும்புப் பகுதியில் தொடர்ந்து வலி இருந்து, ஓய்வெடுத்தாலும் குறையவில்லை என்றால் கவனம் தேவை. சில நேரங்களில் இது லுகேமியா அல்லது ஆஸ்டியோசார்கோமா போன்ற புற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
5. நெஞ்சுவலி- நெஞ்சுவலி ஏற்பட்டால் பலரும் இதயப் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், சில நேரங்களில் நுரையீரல் புற்றுநோயிலும் நெஞ்சுவலி ஏற்படலாம். தொடர்ந்து இருமல், சளியில் ரத்தம், மூச்சுத்திணறல் மற்றும் குரலில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |