ஐபிஎல் ஏலத்தில் சென்னை, மும்பை அணிகள் புதிய சாதனை - என்ன தெரியுமா?
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், பஞ்சாப், குஜராத் , லக்னோ ஆகிய 10 அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு எடுத்தன. இதில் எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்தது.
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 11 வீரர்கள் தலா 10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தீபக் சாஹரை கடும் போட்டி போட்டு சென்னை அணி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் சென்னை, மும்பை ஆகிய இரு அணிகளும் 14 ஆண்டுகால ஐபிஎல் சீசனில் எந்த வீரரையும் ரூ.10 கோடிக்கு மேல் எடுத்ததாக வரலாறு இல்லை. அதனை இந்த சீசன் மாற்றி எழுதியுள்ளது. சென்னை அணி தீபக் சாஹரையும், மும்பை அணி இஷான் கிஷனையும் அதிக தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது.