சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த 5 மாவு வகைகளே போதும்
உடல் எடை அதிகரிப்பிற்கு, சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அந்தவவகையில், உடல் எடையை குறைக்க உதவும் 5 மாவு வகைகள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1.Bajra
கம்பு நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. கோதுமை மாவிற்கு சரியான மாற்றாக இருக்கக்கூடியது இந்த கம்பு மாவு.
கம்பு மாவானது நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்தது. மேலும், கொலஸ்ட்ராலை குறைக்க, இரத்த சர்க்கரை அளவை சீராக்க மற்றும் சரியான செரிமானத்திற்கு உதவுகிறது.
2.Makai
மக்காச்சோளத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள், இரும்பு, ஜிங்க், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.
சோள மாவை உணவில் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தோல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் கார்போஹைட்ரேட்டுகளுடன் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
3.Sattu
புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய Sattu ஒரு நிலையான ஆற்றல் வெளியீட்டை வழங்குவது மட்டுமல்லாமல், செரிமானத்திற்கு உதவுகிறது.
மேலும் தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், குளிரூட்டும் பண்புகளுக்காகவும், ஆற்றல் ஊக்கியாகவும் மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது.
4.Ragi
கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிரம்பிய ராகி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரும்பு உறிஞ்சுதலுக்கும், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தவும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கவும் உதவுகிறது.
மேலும் இது வலுவான எலும்புகள் மற்றும் மேம்பட்ட ஹீமோகுளோபின் அளவுகளுக்கு சிறந்த ஒன்றாக அமைகிறது.
5.Amaranth
புரதம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ள அமராந்த் என்கிற ராஜ்கிரா எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
ராஜ்கிரா மாவு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசைகள் பழுது மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. மேலும், எளிதில் ஜீரணிக்கக்கூடும் மற்றும் பசியைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |