அவுஸ்திரேலியாவில் ஒரு தடயமும் இல்லாமல் மாயமான சிறுவன்! தேடும் பணி தீவிரம்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டில் இருந்து ஐந்து வயது சிறுவன் மாயமாகியுள்ளார்.
பழங்குடி இன சிறுவன்
மேற்கு குயின்ஸ்லாந்தில் பழங்குடி இனத்தவராக விவரிக்கப்படும் ஐந்து வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டில் இருந்து எந்தவித தடயமும் இல்லாமல் மாயமாகியுள்ளான்.
பழுப்பு நிற கண்கள், குறுகிய கருப்பு முடி, மெலிதான தேகம் என தோற்றம் கொண்ட குறித்த சிறுவன், கடைசி மவுண்ட் ஈசாவுக்கு அருகிலுள்ள கிராமப்புற நகரமான Pioneerயில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் அவனது குடும்பத்தினர் பொலிஸாரின் உதவியை நாடினர்.
தேடுதல் வேட்டை
அதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சிறுவனின் நிலை குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுவனை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
@Representational